கோட்டாபய விரட்டியடிக்கப்படாதிருந்தால் .... நாமல் வெளியிட்ட புதிய தகவல்
அரகலய மக்கள் போராட்டத்தால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு நிர்ப்பந்திக்கப்படாதிருந்தால் வரி அதிகரிப்பு ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் மற்றும் வரிகளை ஏன் அதிகரிக்கவில்லை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை (IMF)ஏன் அணுகவில்லை என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.
அரகலிய போராட்டம்
“தற்போதைய எரிபொருள் விலைகள் மற்றும் வரி அதிகரிப்புடன் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் கிடைத்துள்ளன.
அரகலய அரங்கேற்றப்படாமல், கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்படாவிட்டால், இந்த வரி மற்றும்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்காது,'' என்றார்.
வரி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களைக் குறைத்த ஒரு தலைவரை ‘அரகலயா’ அகற்றியதாக நாமல் குறிப்பிட்டார்.
ஒரே குழுவினருக்கு மீண்டும் மீண்டும் வரி
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களை குற்றம் சாட்டி, ஒரே குழுவினருக்கு மீண்டும் மீண்டும் வரி விதிக்காமல், இந்த நிலைமையை எதிர்கொள்ள தேசிய பொருளாதார பொறிமுறையை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்ட பிரேரணைக்குள் இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)அதிபர் ரணிலுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.