நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்
Colombo
SLPP
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By Thulsi
புதிய இணைப்பு
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எயார்பஸ் விவகாரத்தில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை துஷ்பிரயோகம் செய்ததாக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே அவர் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |