61வது ஆண்டும் நயினை - நல்லூர் பாதயாத்திரை இன்று ஆரம்பம்
நயினை முதல் நல்லூர் வரையான வரலாற்று சிறப்புமிக்க பாதாயத்திரை இவ்வருடம் 61வது வருடமாக நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து நேற்று(18/08/2025) ஆரம்பமானது.
அகிலம் போற்றும் அகிலாண்ட நாயகி நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து நாகம் தாங்கிய வேல் பவனி கடல் மார்க்கமாக குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்து.
பாத யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் - புங்குடுதீவு வீதி ஊடாக யாழ். நகரப் பகுதியை வந்தடைந்து நல்லை கந்தன் தேர் உற்சவத்தில் கலந்து கொள்ள இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நல்லை கந்தன் தேர் உற்சவம்
நயினாதிவில் இருந்து புறப்பட்ட யாத்திரை குழுவினர் புங்குடுதீவில் உள்ள பிரபல்யமான ஆலயங்களை தரிசித்த பின்னர் புங்குடுதீவில் தங்கிருப்பார்கள்.

இரண்டாம் நாள் (19/08/2025) புங்குடுதீவில் இருந்து புறப்பட்டு வேலணை, மண்கும்பான் பகுதிகளில் காணப்படும் ஆலயங்களை தரிசித்து மண்கும்பான் பகுதியில் தங்கியிருப்பார்கள்.
மூன்றாம் நாள் (20/08/2025) அங்கிருந்து புறப்பட்டு நணபகல் யாழ். நகரப் பகுதியில் காணப்படும் சத்திரம் ஞான வைரவர் ஆலயத்தை வந்தடைந்தது மாலை சத்திரம் ஞான வைரவர் ஆலயத்தில் பஜனை பாசுரங்களை பாடி அங்கு இருந்து யாழ். வில்லுன்றி பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு தரித்து நிற்பார்கள்.
நான்காம் நாளான (21/08/2025) அதிகாலை நல்லை கந்தன் தேர் உற்சவத்தில் கலந்து கொண்டு தேரின் பின்னே பஜனை பாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்