நீர்கொழும்பு சிறை கலவரம்! 20 அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation Negombo
By Dharu Aug 28, 2026 02:07 PM GMT
Report

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் 32 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தலைமை சிறை அதிகாரி மற்றும் சிறை அதிகாரிகள் உட்பட 20 பேரை அடையாள அணிவகுப்பில் முன்னிலையாகுமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலை கலவரம் தொடர்பான வழக்கு, நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த 20 நபர்களும் அடையாள அணிவகுப்பிற்காக செப்டம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் என்ன நடந்தது..! வெளியானது தகவல்

நீர்கொழும்பு சிறையில் என்ன நடந்தது..! வெளியானது தகவல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முந்தைய விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக 70 சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தது.

நீர்கொழும்பு சிறை கலவரம்! 20 அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு | Negombo Prison Riot Court Orders 20 Officers

இந்த சம்பவத்தின் முதல் 6 சந்தேகநபர்களுக்கு, இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருந்தனர்.

இருப்பினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் மற்றொரு நீதிமன்ற நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்களில் இருவர் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

இதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அடையாள அணிவகுப்பிற்காக நான்கு சந்தேக நபர்களையும் நான்கு சாட்சிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள கூற்றின்படி, அணிவகுப்பின்போது நான்கு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறை விவகாரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சி! ஆளுங்கட்சி பரபரப்பு குற்ற்சாட்டு

நீர்கொழும்பு சிறை விவகாரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சி! ஆளுங்கட்சி பரபரப்பு குற்ற்சாட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தோண்டி எடுக்கப்பட்டு சுற்றில் வீசியெறிப்பட்ட கண்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தோண்டி எடுக்கப்பட்டு சுற்றில் வீசியெறிப்பட்ட கண்கள்

YOU MAY LIKE THIS

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026