மீண்டும் பதற்றம் - போருக்குத் திரும்பத் தயார் ...! இஸ்ரேல் பிரதமரின் புதிய அறிவிப்பு
தேவைப்பட்டால் ஈரான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரால் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டு, ஜூன் 18 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், அவரது கருத்துக்கள் வெளியாகின.
ஈரான் அணு ஆயுதங்கள்
இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க இஸ்ரேல் தனித்துச் செயல்படும்.

ஈரானின் அணுகுண்டுகளிலிருந்து நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொண்டோம். தேவைப்பட்டால் இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும். இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.
அமெரிக்காவும், ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இந்த சூழலில், தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகவுள்ளது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |