பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் வேட்டை தொடரும்: நெதன்யாகு கடும் எச்சரிக்கை
ஹமாஸ் (Hamas) அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் (Israel) உங்களை வேட்டையாடும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒட்டுமொத்த உலகின் அமைதிக்கும் ஈரான் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
பிராந்தியத்தின் வளர்ச்சி
பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது, ஏமனில் உள்ள ஹவுதிக்கள் பாதிபேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் ஹமாசின் யாஹ்யா சின்வரும் மற்றும் லெபனானில் ஹசன் நசரல்லாவும் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் ஆசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டு உள்ளதுடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துபவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ கமாண்டர்கள்
ஈரானின் மூத்த இராணுவ கமாண்டர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
அதனை செய்தால் நீங்கள் உயிருடன் இருப்பீர்கள் இல்லை என்றால் இஸ்ரேல் உங்களை வேட்டையாடும்.
கண்டனம்
பொது வெளியில் எங்களுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், தனிப்பட்ட முறையில் எங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலை நிறுத்தும் அளவுக்கு உளவுத்துறை உள்ளதாக பாராட்டுகின்றனர்.
அமெரிக்காவும் மற்றும் ஈரானும் பொதுவான அச்சுறுத்தலை சந்திப்பதை மற்ற தலைவர்களை விட ட்ரம்ப் (Donald Trump) புரிந்து கொண்டுள்ளார்.
அமெரிக்கர்களை பிணைக்கைதிகளாக பிடித்து மிரட்டும் போது, அதற்கான என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
