துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக நிஹால் கெப்பெடிபொல பதவியேற்பு
Srilanka
Colombo
Gotabaya
new-chairman-of-the-port-authority
By Vanan
இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக நிஹால் கெப்பெடிபொல பதவியேற்றுக்கொண்டார்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் துறைமுக அதிகார சபையின் 27 ஆவது தலைவராக நிஹால் கெப்பெடிபொல நியமிக்கப்பட்டார்.
வணிக ரீதியான கப்பல் துறை நிபுணரான அவர், 2015 ஆம் ஆண்டு வரை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் செயற்பட்டார்.
ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்கவின் இடமாற்றத்தைத் தொடர்ந்து, அவ்விடத்துக்கு புதிய தலைவராக நிஹால் கெப்பெடிபொல நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி