ரணிலின் அரசியல் கணக்கு! நாமல் இல்லாத மொட்டுக்கு புதிய முகம்...

Namal Rajapaksa Ranil Wickremesinghe Rajapaksa Family Kanchana Wijesekera
By Dharu Oct 03, 2026 11:53 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் தலைமையில் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை முன்னிறுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை காரணமாக மொட்டுக்கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவதற்கான சாத்தியமான வேட்பாளராக கஞ்சன விஜேசேகரவின் பெயர் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மொட்டுக்கட்சியின் அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை இளம் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகமான அரசியல் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு அரசியல் தரப்புகளிடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர் கடைப்பிடித்த எல்லைகளை மீறிய ராஜபக்சர்கள்

விடுதலைப்புலிகளின் தலைவர் கடைப்பிடித்த எல்லைகளை மீறிய ராஜபக்சர்கள்

கஞ்சன விஜேசேகர மேற்கொண்ட நடவடிக்கை

இதற்காக அவர் குறிப்பாக கஞ்சன விஜேசேகரவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை கையாள்வதில், அப்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர மேற்கொண்ட நடவடிக்கைகள் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கஞ்சன விஜேசேகரவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்து முக்கிய பொறுப்பொன்றை வழங்குவதற்காக ரணில் விக்ரமசிங்க பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கஞ்சன விஜேசேகர அரசியலில் இருந்து சிறிது காலம் விலகியிருக்க விரும்புவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாமல் ராஜபக்சவும் கஞ்சன விஜேசேகரவை சந்தித்து மொட்டுக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான அழைப்பை விடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பட்சத்தில், கஞ்சன விஜேசேகரவை மொட்டுக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை

சாதகமான அரசியல் களம்

கஞ்சன விஜேசேகரவை மீண்டும் அரசியல் களத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில், அடுத்த மக்கள் பேரணியை மாத்தறை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சன விஜேசேகரவுக்கு அரசியல் ரீதியாக சாதகமான களமாக மாத்தறை கருதப்படுவதால், அவரை கட்சிக்குள் மீண்டும் இணைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் கடைசி நேரத்திலாவது மொட்டுக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என்ற நம்பிக்கையும் கட்சிக்குள் நிலவுவதாக கூறப்படுகிறது.

அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணிக்கு சில நாட்களுக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து, கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பான கேள்விகள் எழுந்தன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேரணியில் கலந்துகொண்ட போதிலும், அவரது உடல்நிலை தொடர்பான விவாதங்கள் மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்துள்ளன.

இதனால், ராஜபக்ச குடும்பத்திற்கு அப்பால் இளம் தலைமுறையினரை ஈர்க்கக்கூடிய புதிய அரசியல் முகம் ஒன்றை மொட்டுக்கட்சி தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்

நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்

புதிய அரசியல் கூட்டணி

இந்த பின்னணியில் கஞ்சன விஜேசேகரவின் பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கஞ்சன விஜேசேகரவை முக்கிய தலைமைத்துவத்திற்கு கொண்டு வருவதன் மூலம், எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மொட்டுக்கட்சிக்கும் இடையில் புதிய அரசியல் கூட்டணிக்கான வாய்ப்பை உருவாக்குவதே ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்காளர் தளத்தை நேரடியாகக் கைப்பற்றுவது கடினம் என்ற நிலையில், மொட்டுக்கட்சியின் பாரம்பரிய வாக்காளர் தளத்தை கஞ்சன விஜேசேகர போன்ற இளம் தலைவர்களின் ஊடாக மீண்டும் ஒருங்கிணைக்க முடியும் என ரணில் தரப்பு கணக்கிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அவர் உண்மையில் மீண்டும் அக்கட்சியில் இணைவாரா அல்லது புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பாரா என்பது தொடர்பில் இன்னும் தெளிவான முடிவு வெளியாகவில்லை.

எனினும், நாமல் ராஜபக்ச எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் வயது, உடல்நிலை ஆகியவற்றுக்கு மத்தியில், கஞ்சன விஜேசேகரவை மையப்படுத்திய அரசியல் நகர்வு அக்கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்குமா என்ற கேள்வி தற்போது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022