இலங்கையர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ரணிலின் திட்டம்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Vanan Oct 02, 2022 01:24 PM GMT
Report

எமது அடுத்த 25 வருட திட்டங்களில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் என்றென்றும் சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இழந்த பொன்னான வாய்ப்புகளுக்காக வருந்துவதற்குப் பதிலாக, உளப்பாங்கு ரீதியிலான விழிப்புணர்வினால் மட்டுமே நிகழ்கால மற்றும் எதிர்கால வாய்ப்புகளை அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த முடியும். 36 ஆவது உலக குடியிருப்பு தினத்தை கொண்டாடும் உங்களை இப்பணிக்காக அழைக்கிறேன்.

நாட்டை அபிவிருத்தி செய்வது கடினமான பணி

இலங்கையர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ரணிலின் திட்டம் | Next 25 Year Plan Ranil Expectations

நாம் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. நம்மை விட குறைந்த சமூக - பொருளாதார நிலையைக் கொண்டிருந்த பிராந்திய மற்றும் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் ஏற்கனவே நம்மைக் கடந்து சென்றுவிட்டன.

ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்ட புத்தாக்க பொருளாதாரத்தின் மூலம் நிலையான அபிவிருத்தியை அடைய உதவும் நீண்டகால தேசிய கொள்கைகள் இல்லாத ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது கடினமானதொரு பணியாகும்.

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட எதிர்பார்த்துள்ள இவ்வேளையில், எமது அடுத்த 25 வருட திட்டங்களில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் என்றென்றும் சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அதற்காக, அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றோம்.

2,000 வீடுகள் நிர்மாணிக்கும் பணி

இலங்கையர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ரணிலின் திட்டம் | Next 25 Year Plan Ranil Expectations

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 வீடுகள் நிர்மாணிக்கும் பணியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவை பெருநகரங்களில் மட்டுமின்றி சிறுநகர்ப்புறங்களிலும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை திறனாகவும் மனிதாபிமானமாகவும் தீர்ப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். அவை கையளிக்கப்படும்போது, தனிநபர் துதிபாடல்களுக்கு அப்பால் “பொறுத்தமானவருக்கே உரிமையாகும்” வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.

இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் நம்மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களை உணர்வுபூர்வமாக உற்றுநோக்கி தன்னம்பிக்கையுடன் தகுந்த பதில்களை வழங்குவது அனைவரின் பொறுப்பாகும்.

நீண்ட காலக் கொள்கைகள்

இலங்கையர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ரணிலின் திட்டம் | Next 25 Year Plan Ranil Expectations

ஏற்படக்கூடிய பிரச்சினைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவற்றை வெற்றிகரமாக சமாளிக்கும் வகையில் நீண்ட காலக் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது, காலத்தின் தேவையாகும். நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை நான் காண்கிறேன்.

எவரையும் கைவிடாத, இடைவெளி இல்லாத, பிற்படுத்தப்படாத மனிதர்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்க ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவு கூர்ந்து, 2022 உலக குடியிருப்பு தினக் கொண்டாட்டத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளது.    

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016