அரச தலைவராகும் கனவில் பலர் - விபரங்கள் வெளியாகின

sajith sri lanka gotabaya presidental election common candidate
By Vanan Dec 19, 2021 06:25 AM GMT
Report

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் பலர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது வேட்பாளர் என்ற வார்த்தை இலங்கை அரசியலுக்கு புதிதல்ல. இதனால், அடுத்த அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் என்ற வார்த்தை ஒலிக்கும் என்பதற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன.

10க்கும் மேற்பட்ட நபர்கள் பொது வேட்பாளராக போட்டியிட தயாராகி வருவதே அதில் முக்கிய அம்சமாகும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அரச தலைவர் தேர்தலில் ஒரு கட்சி ஒரு வேட்பாளரை மாத்திரமே நிறுத்த முடியும். எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பொது வேட்பாளராக போட்டியிடும் கனவில் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் முதலில் இருப்பவர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச.

அடுத்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிட போவதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். கடந்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு பிரதான வேட்பாளர்களில் சஜித் பிரேமதாசவும் ஒருவர்.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள இரண்டு முக்கியஸ்தர்கள் அடுத்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான திட்டங்களை வகுத்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் ஒரு முறை அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

இரண்டாம் நபர் 2025 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலை இலக்கு வைத்து அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஒரே கட்சிக்குள் இருக்கும் இந்த இருவருக்கும் இடையில் தற்போது பனிப் போர் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிய கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடுத்த அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் கனவில் இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சராக அர்ஜூன ரணதுங்கவின் எதிர்கால அரசியல் குறித்து இலங்கையின் அரசியல் துறையில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இப்படியான பின்னணியில் ஊடக சந்திப்பொன்றில் ரணதுங்க வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குரியதாக அமைந்தது. தனக்கு அழைப்பு கிடைத்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவேன் என அவர் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் அர்ஜூன ரணதுங்கவும் அடுத்த அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் இருக்கின்றார் என்பது தெளிவான விடயம்.

அதேவேளை அரசியல் களத்தில் மேலும் இரண்டு பேர், முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உதவியுடன் அடுத்த அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்கனவே மோதல் ஆரம்பமாகி விட்டதாக உட்தரப்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் ஒருவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய சிரேஷ்ட உறுப்பினர் என தெரியவந்துள்ளது. தனக்கு முன்னாள் அரச தலைவரின் ஆதரவு கிடைக்கும் என அவர் கூறி வருகிறார்.

இதனிடையே சிறிலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஒருவரும் அரச தலைவர் தேர்தல் கனவில் இருந்து வருகிறார். அவர் தற்போது அரசாங்கத்துடன் கொள்கை மோதலில் ஈடுபட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி, தனியான அரசியல் பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள அவர், அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்.

இவர்களை தவிர மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கட்சி அரசியலில் நேரடியாக சம்பந்தப்படாத நபர் ஒருவரும் அடுத்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என பேசப்பட்டு வருகிறது. அந்த நபர், இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்ப்பார்ப்பில் இருந்து வருவதாக பேசப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பை தம்மிக்க பெரேரா கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தம்மிக்க பெரேராவை பொது வேட்பாளராக நிறுத்துவதாக கூறியிருந்தார் என அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026