வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு இலவச விமான டிக்கெட்! வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்

srilanka corona virus nimal siripala de silva
By Vasanth Feb 04, 2021 07:31 AM GMT
Report

  தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் நிலவும் இடவசதி பற்றாக்குறை காரணமாகவே வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்படுவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கு வசதியாக நாட்டின் 09 மாகாணங்களிலும் ஒன்பது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் அந்த மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிதியில் அந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அது தொடர்பில் கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் வசதி இல்லாதோருக்கு இலவச விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்து விரைவில் அனைவரும் அழைத்து வரப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு வார காலத்திற்குள் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் கலந்துரையாடி வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களை விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் பணிபுரியும் ஏராளமான இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாது பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதுவரை வெளிநாட்டில் பணிபுரியும் 32000 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 22483 பேர் தாய்நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020