பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முயற்சிக்கும் JVP - அம்பலப்படுத்தும் கம்மன்பில

Anura Kumara Dissanayaka Prime minister Janatha Vimukthi Peramuna Udaya Gammanpila Harini Amarasuriya
By Sathangani Aug 12, 2025 05:01 AM GMT
Report

பிரதமர் ஹரிணி அமரசூரியவை (Harini Amarasuriya) நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு தரப்பினர் தற்போது செயற்படுகின்றனர் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று (11) நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும். அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

பிரதமரை மலினப்படுத்திய அமைச்சர்

இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர் பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது. அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார்.

பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல, ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளதை கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம்.

பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முயற்சிக்கும் JVP - அம்பலப்படுத்தும் கம்மன்பில | No Change In The Sl Prime Minister Position Anura

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளார்.

ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவை தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமானது.

தொடருந்து பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

தொடருந்து பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

தெளிவாக குறிப்பிட்ட ஜனாதிபதி 

தேசிய மக்கள் சக்தியின் தலைவராக பிரதமர் உள்ளார். மேற்குலக நாடுகளின் தூதரக பிரதிநிதியாகவும், அரசாங்கத்தின் பிரபுக்கள் வகுப்பின் பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார்.

பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முயற்சிக்கும் JVP - அம்பலப்படுத்தும் கம்மன்பில | No Change In The Sl Prime Minister Position Anura

அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், பாலின சமத்துவத்தின் பிரதிநிதியாகவும், கல்வி மற்றும் தொழில்துறை பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். ஆகவே அவரை பதவி நீக்க முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்து பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு” என தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்