கோட்டாபயவின் உத்தரவு! - லிட்ரோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
இரண்டாம் இணைப்பு
சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிரடி அறிப்பொன்றை லிட்ரோ நிறுவன தலைவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச தலைவரின் பணிப்புரைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
கையிருப்பு வரும் வரை வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிவாயு இறக்குமதிக்காக 07 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படவுள்ளது என லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு எரிவாயு தாங்கிய கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளது.
தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி,
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
