பிரிட்டனில் மாயமான அதிகாரி : சிறிலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Sri Lanka Army Missing Persons United Kingdom
By Jaso Sep 10, 2024 08:31 AM GMT
Report

பிரிட்டனில் உள்ள Royal Military Academy Sandhurst இல் தனது பயிற்சியை முடித்து அண்மையில் பட்டம் பெற்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி கடற் மொஹமட் அனீக் (Mohammed Aneek )காணாமற்போன நிலையில் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகாரி அனீக் கடந்த ஓகஸ்ட் நடுப்பகுதியில் காணாமல் போனதைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதவி உயர்த்தப்பட்ட அதிகாரி

44 வார தீவிர பயிற்சித் திட்டத்திற்கு உட்பட்ட அனீக், அதிகாரிகளுக்கான பயிற்சியின் முடிவைக் குறிப்பதான ஓகஸ்ட் 9 அன்று நடைபெற்ற அணிவகுப்பின் போது இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.

பிரிட்டனில் மாயமான அதிகாரி : சிறிலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி | No Info Yet Over Missing Sl Armys Officer Cadet

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியா இலங்கைக்கு விடுத்த கோரிக்கை

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியா இலங்கைக்கு விடுத்த கோரிக்கை

தனிப்பட்ட முறையில் வாழ்த்து 

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகித போகொல்லாகமவும்(Rohitha Bogollagama )அனீக்கிற்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். ஓகஸ்ட் 9 ஆம் திகதி அக்கடமியை காலி செய்துவிட்டு, அனீக் இலங்கை திரும்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

பிரிட்டனில் மாயமான அதிகாரி : சிறிலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி | No Info Yet Over Missing Sl Armys Officer Cadet

எனினும், அவர் மறுநாள் இலங்கைக்குத் திரும்பவிருந்த விமானத்தை தவறவிட்டார். இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விமான நிலையத்திற்கு போக்குவரத்து வசதியை வழங்கியபோது, ​​அனீக் தனது சொந்த ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி இலங்கை திரும்ப மறுத்ததாகக் கூறப்படுகிறது.

சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார, அனீக் எங்கிருக்கிறார் என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.

இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை : ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு

இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை : ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு

சிறிலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அவர் காணாமல் போனமை குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்தில் வசிக்கும் அனீக்கின் பல உறவினர்கள் அவரது விழாவில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் மாயமான அதிகாரி : சிறிலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி | No Info Yet Over Missing Sl Armys Officer Cadet

ஆனால் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் சிறிலங்கா இராணுவம் சர்வதேச இராணுவப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்பதில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்