இலங்கையின் கோவிட் கட்டுப்பாடுகள் குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கை வருபவர்களுக்கான கோவிட் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்தவகையில், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் கொரோனா சுகாதார நடைமுறைகள் அமுல்படுத்தப்படாது என்று சுகாதார அதிகாரிகள் இந்த வாரம் தெரிவித்துள்ளனர்.
எந்தவித தடைகளும் இன்றி இலங்கைக்குள் பிரவேசிக்கலாம் என சுற்றுலாத்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
சீன சுற்றுலா பயணிகளுக்கு

குறிப்பாக, பல நாடுகள் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இலங்கை சுற்றுலாத்துறையானது கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பில் எந்த நாட்டவருக்கும் பாரபட்சம் காட்டாது என தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி வெளியிடப்பட்ட சுகாதாரக் கட்டுப்பாடுகள்

இதேவேளை, கடந்த வார இறுதியில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி ஒரு தொகுதி சுகாதார கட்டுப்பாடுகளுடனான பட்டியலை வெளியிட்டது, பின்னர் இது கடுமையான எதிப்புகளின் மூலம் விரைவாக திரும்பப் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.