யாழில் சைவமாக மாறிய அசைவ உணவகம் : ஒரு தமிழ் உரிமையாளர் இப்படி நடந்தது பொருத்தமா !
அண்மைய நாட்களில் ஈழத்தமிழர்களிடையே ஒரு பெரும் பேசுபொருளான நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்ட அசைவ உணவகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் எழுந்த நிலையில் அது இப்போது ஒரு சைவ உணவுகளை பரிமாறும் ஒரு உணவகமாக மாறியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது எந்த அளவுக்கு சாத்தியமானது ?
ஏற்கனவே கோண்டாவிலில் ஒரு ஆலயத்திற்கு முன்பதாக அமைக்கப்பட்ட பல்தேசிய நிறுவனம் நடந்து கொண்டதை போல இங்கும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் ?
ஈழத்தழர்களின் பண்பாட்டு அடையாளமான நல்லூரை ஏன் ஒரு புனித பூமியாக பிரகடனப்படுத்த முடியவில்லை ?
யாழ்ப்பாண மக்களின் மனநிலை இந்த விடயத்தில் எப்படியிருக்கிறது ? உண்மையில் இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்கள் பொறுப்புடன் நடந்துகொண்டார்களா ?
இந்த விடயத்தில் மாநகரசபை ஏன் இப்படி நடந்துகொண்டது ? என பல கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் வரதராசா பார்த்தீபன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய சக்கரவியூகம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
