சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு பயந்து யுக்திய நடவடிக்கையை கைவிடப் போவதில்லை : டிரான் அலஸ் உறுதி

Tiran Alles Sri Lanka Volker Türk Drugs
By Sathangani Jan 14, 2024 03:50 AM GMT
Report

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் போதையொழிப்புக்கான யுக்திய நடவடிக்கையை சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து  ஒருபோதும் கைவிடப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டிர்க் மற்றும் உள்நாட்டு சிவில், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் போதையொழிப்பு தொடர்பில் முன்னெடுத்து வரும் யுக்திய நடவடிக்கையில் பாதுகாப்புத் தரப்பினர் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் எதேச்சதிகாரமாக செயற்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை குறித்த நடவடிக்கைளில் பாதுகாப்புத் தரப்பினரை ஈடுபடுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் டிரான் அலஸ் மேலும் தெரிவிக்கையில்

முப்படை வீரர்களின் தினசரி உதவித்தொகை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம்

முப்படை வீரர்களின் தினசரி உதவித்தொகை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம்

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம்

“நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குறித்த செயற்றிட்டமானது கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு பயந்து யுக்திய நடவடிக்கையை கைவிடப் போவதில்லை : டிரான் அலஸ் உறுதி | Not Going To Abandon Yukthiya Operation Tiran
இதுவரையில் கணிசமான அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் பங்கேற்பவர்கள், விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்விதமான நடவடிக்கை தொடரும் பட்சத்தில் குறுகிய காலத்தில் போதைப்பொருட்களை ஒழித்த நாடாக இலங்கை உருவெடுக்கும் என்பதில் எனக்கு தீவிரமான நம்பிக்கை உள்ளது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு போதையொழிப்பு முக்கிய விடயமாக இருக்கின்றது. ஆகவே இந்தச் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். மனித உரிமைகள் உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் உள்நாட்டிலோ, சர்வதேசத்திலோ என்மீது அழுத்தங்கள் பிரயோகிப்பதற்கு முனைந்தால் அதற்கு அடிபணியப்போவதில்லை.

பறப்பை மேற்கொண்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறப்பை மேற்கொண்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

போதைப்பொருளற்ற நாட்டைக் கட்டியெழுப்புதல் 

முன்னதாகவே, நாட்டில் உள்ள இராஜதந்திரிகள் என்னுடன் இந்த விடயங்கள் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். அவர்கள் இந்த கடுமையான நடவடிக்கையை தளர்த்துமாறு கோரினார்கள்.

சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு பயந்து யுக்திய நடவடிக்கையை கைவிடப் போவதில்லை : டிரான் அலஸ் உறுதி | Not Going To Abandon Yukthiya Operation Tiran

ஆனால் போதைப்பொருளால் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதிலுள்ள பாரிய ஆபத்துக்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். என்மீது அழுத்தங்கள் பிரயோகிப்பதற்கு முனைந்தால் அதற்கு அடிபணியப்போவதில்லை.

ஆகவே, நான் தற்போதுள்ள பதவியில் நீடிக்கும் வரையில் நிச்சயமாக போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன். போதைப்பொருளற்ற நாட்டை மீளமைப்பதற்காக எனது அர்ப்பணிப்புக்கள் தொடரும்.

இந்த முன்னெடுப்பில் அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், விமர்சனங்களைக் கண்டு பின்வாங்கப்போவதில்லை“ என தெரிவித்தார்.

தொடரும் யுக்திய சுற்றிவளைப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா

தொடரும் யுக்திய சுற்றிவளைப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026