மைத்திரிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது - வெளிவந்த அறிக்கை
ஜனாதிபதி ஒருவர் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தவறுகின்றமை, எந்த வகையிலும் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு காரணமாக அமையாதென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு வலியுறுத்தியுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் வழக்கினையும் தாக்கல் செய்ய, சட்ட ரீதியாகவோ தர்க்க ரீதியாகவோ இடமில்லை என நிறைவேற்றுக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆணைக்குழு தமக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பை மீறி விடயங்களை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பில், ஆணைக்குழுவின் அறிக்கையில் கவனத்திற்கொள்ளப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு தெரிவித்துள்ளது.