திலீபனின் நினைவேந்தலில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் : வெடித்த சர்ச்சை

Sri Lankan Tamils Jaffna Tamil National People's Front
By Independent Writer Sep 26, 2025 12:57 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

நல்லூரில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றினால் குறித்த பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது "அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என்ற கருத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முரண்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று (26) நல்லூரில் உள்ள பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றபோது குறித்த சம்பவம் நடைபெற்றது.

யாழ். நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி - திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்

யாழ். நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி - திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்

துண்டுப்பிரசுரம் விநியோகம் 

இது குறித்து மேலும் தெரியவருகையில், நினைவேந்தல் நிறைவடைந்தபோது அங்கு நின்ற ஒருவர் துண்டுப்பிரசுரங்களை அங்கிருந்தவர்கள் மத்தியில் விநியோகித்தார்.

குறித்த துண்டுப் பிரசுரத்தில், ''மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும்.

திலீபனின் நினைவேந்தலில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் : வெடித்த சர்ச்சை | Notice Distributed In Thileepan Commemoration

இச் சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும். இன்று எமது தமிழ் கட்சிகள் சில மக்களில் எல்லா விடயங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்து அதனை அரசியல் ஆக்கப்பார்க்கின்றனர்.

எங்களுக்கான உரிமைப் போராட்டத்தில் எத்தனையோ போராளிகள் ஆயுத வழியிலும், அகிம்சை வழியிலும், தன்னைத்தானே வெடித்துச் சிதறியும் போராடி மாவீர்கள் ஆனார்கள். இவர்கள் இன்றும் எங்களுக்கு தெய்வங்களே.

இந்த தெய்வங்களை நாம் வணங்குவதற்கு யாரும் தடைசெய்யவோ, அரசியல் ஆக்கவோ கூடாது. ஆனால் இந்த மாவீரத் தெய்வங்களின் வழிபாட்டினை அரசியல் கட்சி ஒன்று தனது அரசியலுக்காக பயன்படுத்துகின்றது.

எங்களுடைய மண்ணுக்காக அகிம்சை வழியில் போராடி ஆகுதியாகிய திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந் நிகழ்வு எக்காலமும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் அரசியல் கட்சி ஒன்று உள்நுழைந்து தானே இதனை செய்வதாக காட்டி வருகின்றது.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல்

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல்

அரசியல் கட்சியின் தலையீடு

இது மட்டுமில்லாது வணக்கத்தை செலுத்த வரும் சிலரை வணக்கம் செலுத்த விடாமல் திருப்பி அனுப்புகின்றனர். அண்மையில் வணக்கம் செலுத்த வந்த அமைச்சர் ஒருவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு செய்வதற்கு இவ் அரசியல் கட்சிக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அழையா விருந்தினராக வந்த இவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர். ஒரு வணக்கஸ்தலத்தில் வணக்கம் செலுத்த அனைவரிற்கும் உரிமை உண்டு.

இன மத வேறுபாடின்றி இது மதிக்கப்படல் வேண்டும். இச் செயற்பாடு அரசியலிற்கு அப்பாற்பட்டதொன்றாகும். இதில் காட்டு மிராண்டித்தனமாக யாரும் நடக்கக் கூடாது. அதுவும் மக்களின் சேவகர்கள் இதனை செய்யக்கூடாது.

திலீபனின் நினைவேந்தலில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் : வெடித்த சர்ச்சை | Notice Distributed In Thileepan Commemoration

அந்த வகையில் மக்களால் முன்னெடுக்கப்படும் இவ் வணக்க நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதோடு. தற்போது இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி இதிலிருந்து உடன் வெளியேற வேண்டுமென வேண்டுகின்றோம்''என்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தவரை அச்சுறுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் குறித்த நபர் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காக துண்டுப்பிரசுரத்தை விநியோகித்ததாக அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

யாழ். வேலணை பொது நினைவிடத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!

யாழ். வேலணை பொது நினைவிடத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி