வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல்

Sri Lankan Tamils Mannar Mullaitivu Vavuniya
By Sathangani Sep 26, 2025 10:24 AM GMT
Report

தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்த தியாக தீபம் திலீபனுக்கு வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் திலீபனின் 38ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவுதினம் நினைவுகூரப்பட்டது.

அவசர கால சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருதல், வீதியோர இராணுவ முகாம்களை அகற்றல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈழ மக்களுக்காக நல்லூரின் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் உண்ணா விரதம் இருந்து 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26 அன்று திலீபன்  உயிர் துறந்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

முல்லைத்தீவில் நினைவேந்தல் 

இந்த நிலையில் தமிழர் தயாகமெங்கும் தமிழர் வாழும் தேசமெங்கும் இன்று தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்ப்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல் | Thiyaga Theepam Thileepan Commemoration In Vanni

அதேவேளை வற்றாப்பளையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட் பிரசாத் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

அதேபோன்று முள்ளியவளை பிரதேசத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான்: ரவிகரன் எம்.பி சபையில் கருத்து

பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான்: ரவிகரன் எம்.பி சபையில் கருத்து

வவுனியாவில் நினைவேந்தல் 

வுவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல் | Thiyaga Theepam Thileepan Commemoration In Vanni

குறித்த அஞ்சலி நிகழ்வானது வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபியடியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.

யாழ். வேலணை பொது நினைவிடத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!

யாழ். வேலணை பொது நினைவிடத்தில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!

தமிழரசுக்கட்சியினால் நினைவேந்தல் 

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று  (26) காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல் | Thiyaga Theepam Thileepan Commemoration In Vanni

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.ஊரெழுவில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவஞ்சலி

யாழ்.ஊரெழுவில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவஞ்சலி

மன்னாரில் நினைவேந்தல் 

அத்துடன் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று  (26) காலை மன்னாரில் நினைவு கூரப்பட்டது.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல் | Thiyaga Theepam Thileepan Commemoration In Vanni

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற போது அன்னாரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவிக்கப் பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட தனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி - திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்

யாழ். நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி - திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி