சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள்

Vavuniya Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Sathangani Sep 30, 2024 01:14 AM GMT
Report

புதிய இணைப்பு 

2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.

வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 25 பேர் ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பாடசாலையின் பெறுபேறுகளில் மாணவர்கள் உயர்வை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போதும் அதிகளமான மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தியை பெற்றுள்ளதோடு 16 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தியையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சையில் சாதனை: நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி

சாதாரண தர பரீட்சையில் சாதனை: நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி

சிறந்த பெறுபேறு 

அதிகஸ்ட பாடசாலையான வவுனியா - சின்னடம்பன் வித்தியாலய மாணவர்கள் இம்முறை வரலாற்றில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் செந்தில்குமரன் தமிழருவி என்ற மாணவி 7A, B, C என்ற பெறுபேற்றைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அத்துடன், இந்த பாடசாலையின் ஏனைய மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன.

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள் | O Level Exam Results 2024 In Vavuniya District

இந்த நிலையில், நவரத்தினம் அகலியா - 3A, 3B, 2C, S பெறுபேற்றையும், விவேகானந்தராசா பாவரசன் - A, 3B, 3C, 2S பெறுபேற்றினையும், சிவகுமார் சாருஜன் - A, 3B, 4C, S பெறுபேற்றினையும், வசந்தகுமார் கிந்துஷா - B, 4C, 4S பெறுபேற்றையும்,  திருச்செல்வம் நிலாயினி - 3B, 2C, 3S பெறுபேற்றையும் அன்ரன் செல்வகுமார் சன்சிகா - 2B, 3C, 3S பெறுபேற்றையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 

முதலாம் இணைப்பு 

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய (Vavuniya Tamil Madhya Maha Vidyalayam) வரலாற்றில் முதல் தடவையாக இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

சாதனை படைத்த மாணவர்கள் 

இந்தப் பாடசாலை மாணவர்கள் கடந்த காலங்களிலும் அதிகளவான பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள் | O Level Exam Results 2024 In Vavuniya District

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சாதாரண சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிலும் 28 மாணவர்கள் விசேட சித்திகளையும் 18 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் விசேட சித்தியையும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன் இம்முறை அதிகளவான மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

எதிர்க்கட்சி பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ரணில் தயார் : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

எதிர்க்கட்சி பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ரணில் தயார் : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020