மகா ஓயாவில் மூழ்கி இளைஞன் பலி! மற்றுமொருவர் மாயம்
மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவமானது, நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
தீவிர தேடுதல் நடவடிக்கை
அதன்போது, அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு இருவரை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மீரிகம பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நீரில் மூழ்கிக் காணாமல் போன மூன்றாவது இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக மீரிகம காவல்துறையினர், காவல் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |