மேல் நீதிமன்றமாக மாறும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்!
அமைச்சர்களுக்கான நான்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, அமைச்சர்களுக்கான நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களை மேல் நீதிமன்றத்திற்காக ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் குறித்த இல்லங்கள் நீதித்துறை சேவை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ இல்லங்கள்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மேலதிக நீதிமன்ற அறைகள் தேவை.

நமது அரசாங்க அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துவதில்லை.
அதன்படி, மேல் நீதிமன்றத்திற்கு நான்கு அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி, கௌரவ பிரதம நீதியரசருடன் கலந்தாலோசித்து, எதிர்காலத்தில் மேல் நீதிமன்ற அரங்குகள் தற்காலிகமாக குறித்த உத்தியோகபூர்வ இல்லங்களில் அமைக்கப்படும்.
அந்த நான்கு இல்லங்களையும் மிக விரைவில், தலைமை நீதிபதியிடமும் ஒப்படைப்போம்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்