கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
Ministry of Education
A D Susil Premajayantha
By Beulah
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்

அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் உரிய தீர்மானம் உடனடியாக அமுல்படுத்தப்படும் எனவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.