இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Dubai
Crime Branch Criminal Investigation Department
Crime
By Thulsi
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை ஏலக்காய் பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்கவில் (Katunayake) கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று (1.11.2024) இரவு விமான நிலைய காவல் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
டுபாயில் (Dubai) இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காய் பொதியுடன் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 76 கிலோ 300 கிராம் ஏலக்காய் மற்றும் 08 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12 ஐ வசிப்பிடமாக கொண்ட 48 வயதுடையவர் என்பதுடன் விமான நிலைய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்