கல்கிஸ்ஸையில் கோர விபத்து - ஒருவர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
கல்கிஸ்ஸை, கொலுமடம பொருபனை கிளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபராவார்.
பொருபனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, பொருபனை இரும்புப் பாலத்திற்கு அருகில் முன்னால் சென்று கொண்டிருந்த மிதிவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் பலத்த காயமடைந்த மிதிவண்டி ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கல்கிஸ்ஸை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்