சவப்பெட்டிகளுடன் காஸாவிற்குள் நுழைந்த நிவாரண தொடரணி
எகிப்து எல்லை வழியாக காஸாவிற்குள் இதுவரை 20 வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அதில் ஒரு வாகனத்தில் சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
இதுவரை காஸாவுக்குள் நுழைந்த 20 டிரக்குகளை கணக்கிட்டதாக அவர் கூறுகிறார். அந்த எண்ணிக்கையை தான் அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
மருந்துகள் மற்றும் எரிபொருள்
ஏனைய வாகனங்களில் மருந்துகள் மற்றும் எரிபொருள் கொண்டு செல்லப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியான குண்டுவீச்சு
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை அடுத்து காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.இந்த தாக்குதல்களில் இதுவரை 4,137 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 471 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் அந்த எண்ணிக்கை "பல டசின்" என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
