தந்தையுடனான நாட்களை மறக்க எண்ணுகிறேன்; ஒசாமா பின் லேடனின் மகன் ஒமர் பரபரப்புத் தகவல்
அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு கொல்லப்பட்ட அல்-கெய்தா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடனின் நான்காவது மகனான 41 வயதாகும் ஒமர், ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவரது தந்தையுடனான கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தந்தையுடனான கடந்த கால நினைவுகளை பகிர்ந்த ஒமர்

அவர் தெரிவிக்கையில், நான் ஆப்கானிஸ்தானில் சிறுவனாக இருந்த போது எனது தந்தை என்னிடம் துப்பாக்கிகளை வழங்கி அதை சுடுவதற்கான பயிற்சிகளை வழங்கினார். அங்கு நடந்த பல இன்னல்களால் நான் கடுமையாக பாதிப்புக்களை எதிர்கொண்டேன்.
ஒமருக்கு பயிற்சியளித்த பின் - லேடன்

எனது தந்தை அடிக்கடி என்னிடம் தனது பணிகளைத் தொடரும் மகனாக என்னைத்தான் தேர்வு செய்திருப்பதாகக் கூறுவார். ஆனால் அவர் ஒருபோதும் அல் கெய்தா இயக்கத்துடன் என்னை இணையுமாறு வற்புறுத்தியதில்லை, தந்தையுடன் இருந்த கடந்த கால நாட்களை மறப்பதற்கு எண்ணுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்,
அதேவேளை, தனது தந்தையான அல்-கெய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் இரசாயன ஆயுதங்களை நாய்களின் மீது சோதித்ததாகவும் அவரது மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.