மக்களே அவதானம் ..! 300MM ஐத் தாண்டிய மழை - தொடர்ந்தால் ஆபத்து

Weather Floods In Sri Lanka Rain Flood
By Thulsi Sep 21, 2026 09:34 AM GMT
Report

கடந்த மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இன்றைய (21) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி இமாயா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதுடன், இம்மழைவீழ்ச்சியின் தீவிரத்தன்மை மேலும் தொடருமானால் மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல், நிலம் தாழிறக்கம் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற மண்சரிவு அபாயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

சிவப்பு எச்சரிக்கை 

இதுவரை பாரிய அளவிலான மண்சரிவு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதுடன், சிறிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களே அவதானம் ..! 300MM ஐத் தாண்டிய மழை - தொடர்ந்தால் ஆபத்து | Over 300 Mm Of Rainfall Recorded In Three Days

தற்போது மண்சரிவு அபாயம் கொண்ட 14 மாவட்டங்கள் காணப்படுவதுடன், அவற்றில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைவீழ்ச்சியின் தீவிரத்தன்மை மேலும் அதிகரித்தால், மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனச் சிரேஷ்ட புவியியலாளர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் அவமானகரமான தோல்வி...! ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவின் அவமானகரமான தோல்வி...! ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அபாயகரமான பகுதி

மண்சரிவு எச்சரிக்கைகள் பிராந்திய ரீதியாக வெளியிடப்படுவதால், தத்தமது பகுதிக்குரிய எச்சரிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

மக்களே அவதானம் ..! 300MM ஐத் தாண்டிய மழை - தொடர்ந்தால் ஆபத்து | Over 300 Mm Of Rainfall Recorded In Three Days

குறிப்பாக, இதற்கு முன்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக அபாயகரமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு, வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் அவ்வறிவுறுத்தல்களுக்கு அமைவாக உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்துகிறது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்