எரிபொருள் விலைகளைக் குறைக்கிறது பாகிஸ்தான்
அமெரிக்கா - ஈரான் போர் முடிவிற்கு வந்ததை அடுத்து ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்ட நிலையில் உலகசந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வருகிறது.
இந்த எரிபொருள் விலை குறைவை கருத்தில் கொண்டு, மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் எரிபொருள் விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
எரிபொருள் விலை
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 74 ரூபாய் குறைக்கப்பட்டு 299 பாகிஸ்தான் ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 67 ரூபாய் குறைக்கப்பட்டு 311 பாகிஸ்தான் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரியில் ஈரான்-அமெரிக்க மோதல் தொடங்கியதைத் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில் இந்த விலை குறைவு முழுப் பலனும் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
اسلام آباد: 19 جون 2026ء
— Prime Minister's Office (@PakPMO) June 19, 2026
وزیرِ اعظم محمد شہباز شریف کا پاکستان کی ثالثی کی بدولت خطے و عالمی امن کے قیام کے بعد تیل کی قیمتوں کے حوالے سے اہم بیان
وزیرِ اعظم نے کہا کہ خطے میں معاشی صورتحال میں بہتری آنے اور تیل کی قیمتوں میں کمی کا فائدہ فوری طور پر عوام کی جانب منتقل کررہے… pic.twitter.com/868NMNnD6E
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |