இலங்கையில் களமிறங்கும் வெளிநாட்டுப் படைகள்? முன்நாள் வதிவிடப் பிரதிநிதியின் கூற்றால் பீதியடைந்துள்ள ஸ்ரீலங்கா அரசு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.
ஆனால் இந்தியா மதில் மேல் பூனையாக நடுநிலைமை வகித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரனை நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் வெளிநாட்டுப்படைகளின் பிரசன்னமாகலாம் என்று ஐ.நாவுக்கான இலங்கையின் முன்நாள் வதிவிடப் பிரதிநிதியான தமாறா குணநாயம் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான பிரேரனை மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் வெளிநாட்டுப்படைகளின் தங்குதடையின்றி பிரசன்னமாகலாம் என்று, பிரேரனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய தினம் தமாறா கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.