பராட்டே சட்டம் குறித்த சலுகை காலம் நீடிப்பு : வெளியான அறிவிப்பு
பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அரசாங்கம் பராட்டே சட்டத்தை செயற்படுத்துவதை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் நிதியமைச்சு (Ministry of Finance) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் பெற்றவர்கள்
25 மில்லியன் ரூபா முதல் 50 மில்லியன் ரூபா வரை கடனை பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டது.
அத்துடன், 50 மில்லியனுக்கும் அதிகளவான கடனை பெற்றவர்களுக்கான காலக்கெடு 2025 ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.
2025 மார்ச் 31க்கு முன்னர் வங்கிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்த சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும் என்று நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக அரசாங்கம் பராட்டே சட்டத்தை செயற்படுத்துவதை 2025 மார்ச் 31 வரை நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
