மந்திரி.எல்கேயில் முதல் இடத்தைப் பிடித்துள்ள தமிழ் எம்.பி!
sarath weerasekara
parliament
chanakyan
sri Lanka
buddhika pathirana
By Kalaimathy
ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் சிறப்பாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முதலிடத்தினை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வசப்படுத்திக்கொண்டுள்ளார்.
அந்தவகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.
இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
புதிய தரப்படுத்தலிலேயே இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.