இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
நாடாளுமன்ற அமர்வுகளானது இன்று முதல் 20 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் 20 ஆம் திகதிவரை மூன்று நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
கொரோனா சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்வரும் 19 ஆம், 20ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட விருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்துள்ளார்.
19ஆம் திகதி விவாதம் காலை 10 மணி முதல் 5.30 மணிவரையும், 20 ஆம் திகதி விவாதம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரையும் நடத்தப்படவுள்ளது.
மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்படவில்லை என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, நிதிச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், முறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 8 கட்டளைகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
காலை 10 மணிக்கு சபை அமர்வுகள் ஆரம்பமானதும் முற்பகல் 11 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று மாலை 4.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படும்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்