யார் அந்த நபர்? நீடிக்கும் மர்மம் -இரகசியத்தை வெளியிடுவாரா ரணில்?
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய முகமொன்றை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பட்டியல் உறுப்புரிமையை பெற்று நாடாளுமன்றம் செல்ல மறுத்த ரணில் விக்ரமசிங்க கட்சியின் செயற்குழு தீர்மானத்தை மதித்து நாடாளுமன்றம் செல்ல கடந்த மாதம் விருப்பம் தெரிவித்த போதும் இறுதியில் அந்த திட்டத்தை அவர் கைவிட்டுள்ளார்.
கடந்த 8 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிரேஸ்ட தொழிற்சங்கவாதியும் பொருளாதார நிபுணருமாகிய ஒருவரை நியமிக்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
நாட்டில் தற்போது தொழில்துறை ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதால் தொழில் மற்றும் பொருளாதார துறை நிபுணர் ஒருவரை நாடாளுமன்றுக்கு அனுப்ப ரணில் முடிவு செய்துள்ளார்.அந்த நபர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.