கொழும்பில் இன்றையதினம் மக்களுக்கு ஏற்பட்ட அவலநிலை
colombo
people
bus
By Sumithiran
கொழும்பில் இன்று (31) தமது இடங்களுக்கு செல்லவிருந்த பயணிகள் போதிய எண்ணிக்கையிலான பேருந்துகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அலுவலக ஊழியர்களும், வேறு தேவைகளுக்காக கொழும்பு வந்த பயணிகளும், சிகிச்சை பெற வந்த நோயாளிகள் என, பஸ் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
தொலைதூர மற்றும் நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.
புகையிரத சேவைகள் மற்றும் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளமையினால் தமது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை (2)க்குள் எரிபொருள் விநியோகம் சீர் செய்யப்படாவிட்டால், திங்கட்கிழமை முதல் பஸ்கள் முற்றாக சேவையில் ஈடுபடாது எனவும் பஸ் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி