வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கொரோனா பரவுவது மிகக் குறைவு!
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஏனெனில் தற்காலிக தங்குமிடங்களில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் கொடிபிலி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இந்த திடீர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு கொரோனா நோயாளிகூட அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளார். 48 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 121,177 பேர் மே 16ஆம் வரை தற்காலிக தங்குமிடங்களில் இருந்தனர் என்றும் ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் நேற்றைய நிலைவரப்படி அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தரவுகளின்படி மூன்று வீடுகள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன என்றும் 868 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன.
இதேநேரம், அனைத்து முக்கிய நதிகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்