சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் கண்டுகொள்ளாத அரச அதிகாரிகள்
மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் கடந்த வாரங்களில் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை கௌவிக் கொண்டு செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவ்வாறான சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சீசிரிவி (CCTV)கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்
இந்த நிலையில், நேற்றிரவு (07.08.2025) நுவரெலியா - லிந்துலை கெல்சி தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் உறங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்றை சிறுத்தை கௌவிச் சென்றுள்ளது.
இது போன்ற சம்பவங்களால் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, அந்தப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 மணி நேரம் முன்
