27 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பாளங்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!
தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான 14 தங்க பாளங்களுடன் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தாய்லாந்திலிருந்து வந்த குறித்த நபரிடம் ஒரு கிலோ 314 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரம்

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமாகும். அத்துடன் இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மாத்திரமே தங்க இறக்குமதியை முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் உரிய இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி தங்கத்தை நாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.