பெற்றோல் 16, டீசல் 25 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை
increase
fuel price
lanka i o c
By Jaso
உலக சந்தையில் பெற்றோலியத்தின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையை லீட்டருக்கு ரூ .25 ஆகவும், பெற்றோல் லீட்டருக்கு ரூ .15 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஐ.ஓ.சி நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லங்கா ஐ. ஓ.சி நிறுவனம் நாட்டின் இரண்டாவது பெரிய எரிபொருள் விநியோக நிறுவனமாகும். எரிபொருள் விற்பனையால் நிறுவனம் நஷ்டம் அடைவதாக தெரிவித்து லங்கா ஐ.ஓ.சியின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ளார்.
இதேவேளை, நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
எனினும், இந்த நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.