செலுத்தப்பட்டது எரிபொருள் கப்பலுக்கான பணம்! இன்று நாட்டை வந்தடையும் பெட்ரோல் தாங்கிய கப்பல்
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
By Kiruththikan
பெட்ரோல் கப்பல்
பெட்ரோல் ஏற்றி வரும் கப்பல் இன்று (18) அல்லது நாளை (19) நாட்டை வந்தடைய உள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டை வந்தடைந்தவுடன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது 100,000ஐத் தாண்டியுள்ளது எனவும் மற்றும் பதிவு முடியும் வரை புதிய எரிபொருள் இருப்பு விநியோகம் தொடங்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான எரிபொருள்
இதேவேளை, அகில இலங்கை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.எஸ். பெர்னாண்டோ தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான எரிபொருள் ஜூலை 20 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்