இஸ்ரேல் படைகளைத் திணறடிக்க ஹமாஸ் போட்டுள்ள திட்டம்
காசாவில் இஸ்ரேல் படைகளைச் சமாளிக்க ஹமாஸ் கொரில்லா தாக்குதலை மேற்கொள்ள திட்டம் தீட்டிவரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலை முடிந்தவரை தடுத்து நிறுத்துவதே ஹமாஸ் படைகளின் நோக்கமாக இருக்கிறது.
போர் நிறுத்தம்
ஹமாஸை சில வாரங்கள் வரை தொடர்ந்து தடுத்து நிறுத்தினால், அதற்குள் சர்வதேச அழுத்தம் காரணமாகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்று ஹமாஸ் நம்புகிறது.
இதை இலக்காக வைத்தே ஹமாஸ் கொரில்லா தாக்குதலை மேற்கொள்ள திட்டம் போட்டு வருகிறது.
காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் படைகளைச் சமாளிக்க ஹமாஸ் போட்டுள்ள திட்டம் குறித்த
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாகத் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் முதலில் தாக்குதலை நடத்திய நிலையில், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.
அதேநேரம் இப்போது ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது.
நீண்ட போருக்கு தயார் நிலை
காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மிக விரைவில் முழு வீச்சில் படையெடுப்பையும் ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேல் முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஹமாஸ் படையினர் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இதனால் மிகப் பெரிய மற்றும் நீண்ட போருக்கு ஹமாஸ் தயாராகி வருகிறது.
இதன் மூலம் போர் நிறுத்தம் வரும் வரை இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த முடியும் என்று இஸ்ரேல் நம்புகிறது.