யாழில் பாடசாலை பெயரை மாற்றுவதற்கு நடக்கும் முயற்சி - வெடிக்கும் மக்கள் எதிர்ப்பு
கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரை நல்லூர் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை என மாற்றும் முயற்சிக்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் கருத்தறியும் கூட்டத்துக்கு நேற்றைய தினம் (12.10.2025) பாடசாலையின் அதிபரால் நடத்தப்பட்டது.
இது தொடர்பான அழைப்பில் இதன்போதே பாடசாலையின் பெயரை யாழ். நல்லூர் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதியோர் அமைப்பு கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் எதிர்ப்பு
முதியோர் நலன்புரி சங்கத்தினால் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி வடமாகாண கல்வி அமைச்சுக்கும், அதன் பிறகு வடமாகாண ஆளுநருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேநேரம் பாடசாலையின் பெயரை மாற்றினால் இனி வருங்காலங்களில் ஒத்துழைப்புகளை வழங்கப்போவதில்லை என்று பாடசாலையின் பல்வேறு தேவைகளுக்காக தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கி வரும் கல்வியங்காடு கனடா வாழ் மக்கள் ஒன்றியம் பாடசாலைக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை எல்லை பகுதிகளில் காணப்படும் விளம்பர பலகைகளில் கல்வியங்காடு என்ற பெயரை நீக்கி நல்லூராக பயன்படுத்துமாறு நல்லூர் பிரதேச சபை செயலாளரால் கடிதங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
