வீதியில் நெல் பரவிக்கொண்டிருந்தவருக்கு நேர்ந்த அவலம்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் நெல் உலர்த்துவதற்காக, நெல்லை பரவிக்கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம்,கச்சாய் - புலோலி, பருத்தித்துறை பிரதான வீதியில் இச்சம்பவமானது இன்று(11) காலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நெல் பரவிக்கொண்டிருந்தவர்
பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

காலையில் அதிக பனி மூட்டம் என்பதால் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை.
அதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினரின் விசாரணை
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        