கைக்குண்டு மற்றும் அபாயகரமான கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது
arrest
police
colombo
By Vasanth
வெல்லம்பிட்டி - சிங்கபுர பகுதியில் கைக்குண்டு மற்றும் கூரிய ஆயுதத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்றும், இவருக்கு உதவி வழங்கிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
வெல்லம்பிட்டி பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை சிங்கபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த 40 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், அபாயகரமான கூரிய ஆயுதங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி