உயிர்த்தஞாயிறு தினத்தில் பாரிய வெடிபொருட்களுடன் நால்வர் கைது -மீண்டும் தாக்குதலுக்கு திட்டமா?
இன்றையதினம் உலகளாவிய ரீதியில் உயிர்த்தஞாயிறு பண்டிகை கொண்டாடப்படுகிறது.இலங்கையிலும் இந்த பண்டிகை கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தேவாலயங்களில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பாியளவு வெடிபொருட்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவுல, எலஹெர வீதியில் உள்ள பகமுனா பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 கிராம் நீர் ஜெல், 20 கிராம் துப்பாக்கி தூள், 14 டெட்டனேட்டர் தொப்பிகள், கம்பி சுருள்கள் உட்பட மற்றும் பல பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாரியளவிலான வெடிமருந்துகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா? என சந்தேகம் எழுந்ததுடன், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.