காவல்துறையினர் அழைக்கவே இல்லை! விமல் அதிரடி
தங்காலை காவல்துறையில் முன்னிலையாகுமாறு தனக்கு எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, தங்காலை காவல்துறையில் முன்னிலையாகுமாறு எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ இதுவரை எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
விமலின் சர்ச்சைக்குரிய கூற்று
இவ்வாறானதொரு பின்னணியில், நாளை (06.10.2025) காலை 10 மணிக்கு தங்காலை காவல்துறையில் முன்னிலையாகுமாறு விமலுக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரச அனுசரனையில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவர் தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்ததாக விமல் வீரவன்ச அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், இது குறித்து வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
