தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Erimalai
சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது காவல்துறையினர் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடிய சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (31.12.2025) பரவிப்பாஞ்சான் வீதியில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை காவல்துறையினர் மறிக்க முற்பட்டபோது நிறுத்தாது குறித்த வாகனம் பயணித்துள்ளது.
காவல்துறை விசாரணை
பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்று காவல்துறையினரால் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பிச்சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்