முல்லைத்தீவில் காவல்துறையினர் துப்பாக்கிசூடு
Sri Lanka Police
STF
Mullaitivu
Shooting
By Sumithiran
காவல்துறையினரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேக நபரை இன்று (14) கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிப்பரின் சக்கரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை தடுத்து நிறுத்தியதாக ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும்
காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த டிப்பர் வாகனம் தம்மை ஆபத்தில் கொண்டு செல்ல முயற்சித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்