சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரங்கள் பறிமுதல்
கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிளாலிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் காவல்துறையினர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அண்மைக்காலமாக அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காவல்துறையினருக்கு ஆபத்து
இந்த நிலையில் தான் கடந்த வாரம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி காவல்துறையினருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய உழவு இயந்திரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் கொடிகாமம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் எஸ் .பி. திஸ்ஸாநாயக்க தலைமையிலான காவல்துறை குழுவினர் இன்று அதிகாலை குறித்த பகுதிகளில் விசேட சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர், அதேவேளை ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 49 நிமிடங்கள் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்